Search This Blog

Saturday, March 16, 2024

இஸ்லாத்தில் ஜகாத் மற்றும் அதன் முக்கியத்துவம் ll

 

இஸ்லாத்தில் ஜகாத் மற்றும் அதன் முக்கியத்துவம்


ஜகாத் பெறத் தகுதியானவர்கள்:

அல்லாஹ் கூறுகின்றான் :
(ஜகாத் என்னும்தான தர்மங்களெல்லாம் ஏழைகளுக்கும்வறியவர்களுக்கும் இந்த தானதர்மங்களை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும்இஸ்லாத்தின் பால் அவர்களது உள்ளம் ஈர்க்கப்பட்டவர்களுக்கும்அடிமைகளை விடுதலை செய்வதற்கும்கடன்பட்டவர்களுக்கும்அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்வழிப்போக்கர்களுக்கும் உரியனவாகும். (இதுஅல்லாஹ் விதித்த கடமையாகும்அல்லாஹ் (யாவும்அறிபவன்மிகக் ஞானமுடையவன்(9:60)

அல்லாஹ் ஜகாத் பெறத் தகுதியான எட்டு வகைக் கூட்டத்தினரை விளக்கிக் கூறியுள்ளான்இஸ்லாத்தில் ஜகாத் சமுதாயத்தையும் தேவையுடையோரையும் சென்றடைகின்றதுஏனைய மார்க்கங்களிலுள்ளது போல - மார்க்க விற்பன்னர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட மாட்டாது.

1) ஃபகீர் (ஏழை) :

உயிர் வாழ்வதற்குப் போதுமான தேவைகளில் பாதிக்கும் குறைவாகப் பெற்றிருப்பவர்

2) மிஸ்கீன் :

உயிர் வாழ்வதற்குப் போதுமான தேவைகளில் பாதிக்கு மேல் பெற்றிருப்பவர்எனினும் அவர் போதுமான முழுமையான அளவைப் பெற்றுக் கொள்வதில்லைஇவர்களுக்கு பல மாதங்களுக்கான அல்லது ஒரு வருடத்தில் போதுமான அளவிற்குரிய பணம் ஜகாத் நிதியிலிருந்து கொடுக்க வேண்டும்.

3ஜகாத் தொகையை வசூலிப்பவர்கள் :

ஜகாத் தொகையை செல்வந்தர்களிடமிருந்து சேகரிப்பதற்காக ஆட்சியாளரால் நியமிக்கப்படுபவர்கள்அவர்கள் செல்வந்தர்களாயிருந்தால் அவர்களது அந்தஸ்த்திற்கேற்ப அவர்களது வேலைக்குரிய கூலியைக் கொடுக்க வேண்டும்.

4) உள்ளம் ஈர்க்கப்பட்டவர்கள் :

தம் மக்களிடத்தில் மரியாதைக்குரிய தலைவர்களில் எவர்கள் இஸ்லாத்திற்கு வருவார்கள் என்றோ முஸ்லிம்களுக்குத் தொல்லை தராமலிருப்பார்கள் என்றோ எதிர்பார்க்கப்படுகிறதோ அத்தகையவர்கள்இவ்வாறே இஸ்லாத்தில் புதிதாக வந்தவர்களுக்கும் அவர்களது உள்ளங்கள் இஸ்லாத்தின்பால் நேசமாக்கப்படுவதற்காகவும்அவர்களின் உள்ளங்களில் ஈமான் உறுதியாவதற்காகவும் அவர்களுக்கு ஜகாத் கொடுக்க வேண்டும்.

5) அடிமை மீட்பு (சிறையிலிருந்து விடுதலை செய்வதற்கு)

அடிமைகளை உரிமைவிடுவதற்காகவும் எதிரிகளால் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதற்காகவும் ஜகாத் கொடுக்கப்பட வேண்டும்.

6) கடன்பட்டவர்கள் :

இவர்களுடைய கடன்அடைப்பதற்காக ஜகாத் நிதியிலிருந்து கொடுக்கப்பட வேண்டும்ஆயினும் முஸ்லிம்களாயிருப்பதும்கடனை அடைப்பதற்கு வசதியுள்ள செல்வந்தர்களாக இல்லாமலிருப்பதும்அவர்களது கடன் பாவத்திற்குரியதாக இல்லாமலிருப்பதும் தற்காலிக கடனாக இருப்பதும் விதிமுறையாகும்.

7) அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்பவர்களுக்கு:

ஊதியத்தை எதிர்பார்க்காமல் வணக்கமாகக் கருதி போர்புரிபவர்கள்அவர்களின் செலவிற்காக அல்லது ஆயுதங்கள் வாங்குவதற்காக ஜகாத் கொடுக்க வேண்டும்மார்க்கக் கல்வியைத் தேடுவதும் ஜிஹாதைச் சேர்ந்தது தான்மார்க்கக் கல்வியில் ஈடுபவடுவதை நாடும் ஒரு மனிதன் தன்னிடம் பொருளாதார வசதியில்லாமலிருக்குமானால் அவன் மார்க்கக் கல்வியைத் தேடுவதில் ஈடுபடுமளவிற்கு போதுமான தொகையை மட்டும் ஜகாத் நிதியிலிருந்து கொடுப்பது கூடும்.

8) வழிப்போக்கன் :

ஊருக்குச் செல்ல முடியாமல் வழியிலேயே நின்று விட்ட ஒரு பயணிஅவனது ஊரில் அவன் செல்வந்தனாக இருந்தாலும் அவன் ஊர் போய்ச் சேருமளவிற்கு ஜகாத் தொகையிலிருந்து கொடுக்க வேண்டும்.

ஜக்காத்தின் நிதி பள்ளிகட்டுவதற்கும் சாலைகளை சீர்படுத்துவதற்கும் செலவிடுவது கூடாது.

வாடகைக் கட்டிடங்கள் மற்றும் தொழிற்சாலைகள்:

வாடகைக்கான கட்டடங்கள்தொழிற்சாலைகள் போன்றவற்றில் ஜகாத் கடமையில்லைஎனினும் வாடகைப் பணம் நிஸாப் (உச்சவரம்புஎனும் உச்சவரம்பை எட்டியிருந்து ஓராண்டு பூர்த்தியாகி விடுமானால் அதில் ஜகாத் கடமையாகும்உதாரணமாக ஒருவன் ஒரு வீட்டை வாடகைக்கு விட்டு அதன் வாடகையை எடுத்துக் கொள்கிறான்அவன் வாடகையாக எடுத்துக் கொண்ட தொகைக்கோ அல்லது அதில் சிறிதளவுக்கோ அவை ஜகாத்தின் அளவை எட்டும் பட்சத்தில் - ஓராண்டு பூர்த்தியாகி விடுமானால் அதில் ஜகாத் கடமையாகும்.

No comments:

Post a Comment

Recent Posts

Recent Updates

Recent Comments

ADs World

Islamic Life © . Designed by Ourblogtemplates.com | Seo By Islamic Blogger Template

Back to TOP