Search This Blog

Saturday, March 16, 2024

இஸ்லாத்தில் ஜகாத் மற்றும் அதன் முக்கியத்துவம்


இஸ்லாத்தில் ஜகாத் மற்றும் அதன் முக்கியத்துவம்

அல்லாஹ்
 தன் திருமறையில் கூறுகின்றான் :

தொழுகையையும் நிறைவேற்றுங்கள்ஜகாத்தையும் கொடுங்கள். (அல்பகரா : வசனம் 110)

மேலும்
,
'அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக (தவறான வழியிலிருந்து விலகி சரியான வழியில்பிடிப்புள்ளவர்களாக அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும்மேலும் தொழுகையை அவர்கள் நிலைநாட்டவேண்டும்மேலும் ஜகாத்தை அவர்கள் வழங்க வேண்டும் என்பதைத் தவிர (வேறெதுவும்அவர்களுக்குக் கட்டளையிடப்படவில்லைஇதுதான் நேரான மார்க்கமாகும். " (98:5)

இப்னு உமர் (ரலிஅறிவித்து புகாரீ மற்றும் முஸ்லிமில் பதிவாகியுள்ளது - அவர்கள் கூறுகின்றார்கள் :
(அடிப்படைகளானஐந்தின் மீது இஸ்லாம் அமைக்கப்பட்டுள்ளது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் கூறி விட்டு, (ஐந்தானஅவற்றிலிருந்து ஜகாத் கொடுப்பதைக் கூறினார்கள்.
முஆத் (ரலிஅவர்களை யமன் தேசத்தின்பால் அனுப்பிய சம்பவம் புகாரீயில் பதிவாகியுள்ளதுஅதில் இறைத்தூதர் (ஸல்அவர்கள், (ஏகத்தும்தொழுகை ஆகிய முன் கூறப்பட்டஅதற்கு அவர்கள் கீழ்ப்படிந்து (கட்டுப்பட்டுவிட்டால்நிச்சயமாக அல்லாஹ் தர்மத்தை (ஜகாத்தைஅவர்களின் மீது கட்டாயக் கடமையாக்கியுள்ளான்அவர்களில் ஏழைகளாயிருப்போருக்கு திருப்பிக் கொடுக்கப்படும் என்பதை அவர்களுக்கு அறிவிப்பீராகஎன்று கூறினார்கள்.

மேலும்ஜகாத்தை நிறைவேற்றுவதை விட்டவர்நிராகரிப்பில் உள்ளார் என்பது பற்றி உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறுகின்றான் :

ஆகவே அவர்கள் (தங்கள் பாவங்களிலிருந்து விலகிப்பச்சாதபப்பட்டுதொழுகையையும் நிறைவேற்றிஜகாத்தையும் கொடுத்து வந்தால் (அவர்கள்உங்களுக்கு மார்க்கத்தில் சகோதரர்கள். (9:11)

தொழுகையை நிச்சயமாக நிறைவேற்றாதுஜகாத்தையும் கொடுக்காதவர் நம்முடைய மார்க்கச் சகோதரர்களில் உள்ளவரல்லர் - அது மாத்திரமல்லாது நிராகரித்தோரில் அவர் உள்ளவராவார் என்பது பற்றி  இவ்வசனத்திலிருந்து விளங்கப்படுகின்றது.

எவற்றில் ஜகாத் கடமை?

தங்கம்
வெள்ளிவியாபாரச் சரக்குகள்கால்நடைகள் (ஆடுமாடுஒட்டகம்பூமியில் விளையும் தானியங்கள்பழங்கள் மற்றும் உலோகங்கள் ஆகியவற்றில் ஜகாத் கடமையாகும்.

தங்கம்வெள்ளி:

தங்கம்வெள்ளி எந்த வகையைச் சார்ந்ததாக இருந்தாலும் அவற்றில் ஜகாத் கடமையாகும்நிஸாப் எனும் உச்சவரம்பு அளவு தங்கம்வெள்ளி யாரிடம் உள்ளதோ அவர் மீது ஜகாத் கடமையாகும்தங்கத்தில் நிஸாப் அளவு 7.5 தோலா அதாவது 87.48  கிராமாகும்வெள்ளியின் நிஸாப் 52.50 தோலா அளவு அதாவது, 612.36 கிராமாகும்யார் தங்கத்திற்குரிய நிஸாப் அளவை வைத்திருக்கிறாரோ அவர் தன்னிடமுள்ளதில் இரண்டரை சதவீதம் ஜகாத் கொடுப்பது அவர் மீது கடமையாகி விடுகிறது.

ரொக்கப் பணமாகக ஒருவர் ஜகாத் கொடுக்க விரும்பினால் எந்த நாளில் ஓராண்டு பூர்த்தியாகின்றதோ அந்த நாளில் ஒருகிராம் தங்கம் அல்லது வெள்ளியின் விலை மதிப்பைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்பிறகு அதன் மதிப்புக்கு நிகரான பணத்தை ஜகாத் கொடுக்க வேண்டும்.

வியாபாரச் சரக்குகளுக்குரிய ஜகாத்:

அசையாப் பொருள்ளபிராணிஉணவுபானம்கார் போன்றவற்றில் இலாபத்தை நோக்கமாகக் கொண்டு கொடுக்கல் வாங்கல் செய்யக் கூடிய அனைத்திலும் ஜகாத் கடமையாகிறதுஇவற்றில் ஜகாத்திற்குரிய நிபந்தனை : பணம் நிஸாப் எனும் உச்ச வரம்பை எட்டியிருக்க வேண்டும்.அவற்றை வெள்ளிதங்கம் இவ்விரண்டில் ஒன்றின் கிரயத்திற்கு ஈடாக மதிப்பிட வேண்டும்அவற்றின் மொத்தக் கிரயத்தில் இரண்டரை சதவீதம் ஜகாத் கடமையாகும்.

விளைபொருளுக்குரிய ஜகாத்:

சேமிக்கப்படக்
 கூடியநிறுக்கப்படக் கூடிய பேரீத்தம் பழம்திராட்சை போன்ற கனி வகைகளிலும் மணிக்கோதுமைஅரிசி போன்ற தானியங்களிலும் ஜகாத் கடமையாகும்எனினும் பழங்களிலும் காய்கறிகளிலும் ஜகாத் கடமையில்லை.

விளைபொருள்கள் நிஸாப் எனும் உச்சவரம்பை அடைந்து விட்டால் ஜகாத் கட்டாயமாகும்ஜகாத்தின் அளவு 675 கிலோவாகும்கோதுமைக்குரிய நிஸாப் (உச்ச வரம்பு அளவு) 552 கிலோவாகும்ஓராண்டு பூர்த்தியாக வேண்டும் என்பது இவற்றில் நிபந்தனையில்லை.

கால்நடைகளுக்குரிய ஜகாத்:

கால்நடைகள் என்றால் ஒட்டகம்மாடுவெள்ளாடுசெம்மறி ஆடுஆகியவையாகும்இவற்றில் கீழ் காணும் நிபந்தனைகளுடன் ஜகாத் கடமையாகும்.

• நிஸாப் எனும் உச்சவரம்பை எட்ட வேண்டும்ஒட்டகத்தின் நிஸாப் ஐந்துசெம்மறி ஆடுவெள்ளாடு இவற்றின் நிஸாப் நாற்பதுமாட்டின் நிஸாப் முப்பதுஇதற்கு குறைவானதில் ஜகாத் கிடையாது.
• இவை உரிமையாளரின் கைக்கு வந்து ஓராண்டு பூர்த்தியாகி இருக்க வேண்டும்.
• இக்கால்நடைகள் வருடத்தில் அதிக நாட்கள் வெளியே சென்று மேய்ந்ததாக இருக்க வேண்டும்தீனி கொடுத்து வளர்க்கப்பட்டவையாகவோ அல்லது அவற்றுக்கான தீனி விலைக்கு வாங்கப்பட்டவையாகவோ இருந்தால் அல்லது அவற்றுக்கான தீனியை உரிமையாளரே சேகரிக்கின்றார் என்றால் இதுபோன்ற கால்நடைகளுக்கு ஜகாத் கடமையில்லைஆனால் இவை வருடத்தில் அதிக நாட்கள் மேய்ந்தவையாக இருந்தால் ஜகாத் கடமையாகும்.
• அவை பணியில் ஈடுபடுத்தப்படாதவையாக இருக்க வேண்டும்அவற்றின் உரிமையாளன் அவற்றை விவசாயத்திலோ அல்லது சுமை தூக்கவோ அல்லது வேறு வேலைகளுக்கோ அவற்றைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.

ஒட்டகம்:

ஜகாத்திற்குரிய நிஸாப் ஐந்து ஒட்டகங்கள் இருந்தால் ஒட்டகத்தில் ஜகாத் கடமையாகும்ஒரு முஸ்லிமிடம் ஐந்துக்கு மேல் ஒன்பது வரை ஒட்டகங்கள் அவனது உடமையிலிருந்தால் ஓர் ஆண்டு நிறைவடைந்திருந்தால் அவற்றில் ஒரு ஆடு ஜகாத் கடமையாகும்பத்துக்கு மேல் பதினான்கு வரை இருந்தால் அவற்றில் இரண்டாடு கடமையாகும்பதினைந்திற்கு மேல் பத்தொன்பத வரை மூன்றாடுகள்இருபதிற்கு மேல் இருபத்து நான்கு வரை நான்கு ஆடுகள்இருபத்தைந்திற்கு மேல் முப்பத்தைந்து வரை ஒரு வயது பூர்த்தியான பெண் ஒட்டகம்இது அவனுக்குக் கிடைக்கவில்லையானால் இரு வயது பூர்த்தியான ஒரு ஆண் ஒட்டகம். 36 க்கு மேல் 45 வரை இருவயது பூர்த்தியான பெண் ஒட்டகம். 40 க்கு மேல் 60 வரை மூன்று வயது பூர்த்தியான ஒரு பெண் ஒட்டகம். 61க்கு மேல் 75 வரை நான்கு வயது பூர்த்தியான ஒரு பெண் ஒட்டகம். 76 க்கு மேல் 90 வரை இரு வயது பூர்த்தியான இரு பெண் ஒட்டகம். 91க்கு மேல் 120 வரை மூன்று வயது பூர்த்தியான இரு ஆண் ஒட்டகங்கள்இதற்கு மேல் அதிகமானால் ஒவ்வொரு நாற்பதுக்கும் இரு வயது பூர்த்தியான ஒரு பெண் ஒட்டகம்ஒவ்வொரு ஐம்பதுக்கும் மூன்று வயது பூர்த்தியான ஒரு பெண் ஒட்டகம்கீழ்க்காணும் அட்டவணை ஒட்டகத்திற்குரிய ஜகாத்தை தெளிவுபடுத்துகிறது.

மாடுகள்:

ஒருவனிடம்
 30 க்கும் மேல் 39 வரை மாடுகள் இருந்தால் ஒரு வயது பூர்த்தியான ஒரு பசுவும், 40 க்கும் மேல் 59 வரை இரு வயது பூர்த்தியான ஒரு பசுவும், 60 க்கு மேல் 69 வரை ஒரு வயது பூர்த்தியான இரண்டு காளைகளும், 70 க்கும் மேல் 79 வரை இரு வயது பூர்த்தியான ஒரு பசுவும்ஒரு வயது பூர்த்தியான ஒரு காளையும் பின்னர் ஒவ்வொரு 30க்கும் ஒரு வயது பூர்த்தியான ஒரு காளையும்ஒவ்வொரு 40 க்கும் ஒரு வயது பூர்த்தியான பசுவும் கொடுக்க வேண்டும்.

ஆடுகள்:

ஒருவனிடம் 40 முதல் 120 வரை ஆடுகள் இருந்தால் அவன் ஒரு ஆடு கொடுப்பது கடமையாகும். 121 முதல் 200 வரை இரு ஆடுகளும், 201 முதல் 300 வரை இருந்தால் மூன்று ஆடுகளும், 301 முதல் 400 வரை நான்கு ஆடுகளும், 401 முதல் 500 வரை ஐந்து ஆடுகளும் கொடுக்க வேண்டும்பின்னர் இதற்கு மேல் அதிகமாகும் பட்சத்தில் ஒவ்வொரு நூறு ஆடுகளுக்கும் சராசரி ஒரு ஆடு கொடுக்க வேண்டும்.
பின்னர் ஒவ்வொரு நூறு ஆடுகளுக்கும் ஒரு ஆடு கொடுக்க வேண்டும்.


 

No comments:

Post a Comment

Recent Posts

Recent Updates

Recent Comments

ADs World

Islamic Life © . Designed by Ourblogtemplates.com | Seo By Islamic Blogger Template

Back to TOP